வாடிவாசல் படம் காளை மாட்டாலதான் 'இழு இழு...'ன்னு இழுத்துக்கிட்டே போகுதா?.. பிரபலம் சொன்ன 'நச்' பதில்

by ராம் சுதன் |

உள்ளபடியே இந்தப் படத்துக்குக் காளை மாட்டைக் கூட்டிட்டு வந்துருந்தாங்கன்னா அது இந்நேரத்துக்கு செத்தே போயிருக்கும். ஒண்ணு கன்னுக்குட்டியா கூட்டிட்டு வந்தா காளை மாடா ஆயிருக்கும். காளை மாட்டைக் கூட்டிட்டு வந்தா செத்தே போயிருக்கும்.

ஏன்னா அவ்வளவு டிலேவா ஆகிப்போச்சு. காளை மாட்டு மேல எல்லாம் பழியை சுமத்தவே முடியாது. காளை மாடு காரணமே கிடையாது. சூர்யா டிரெய்னிங் எடுத்தாரு. ஊருல இருந்து கொண்டு வந்து ஒரு வீட்டுல கட்டி வச்சிருந்தாங்க. ஏன்னா அந்த மாடு வந்து புதியவர்கள் யாராவது பார்த்தா சீறிடும். கொம்பால குத்திடும். முட்டிடும் அப்படிங்கறது எல்லாம் இருக்கு.

அப்போ தினந்தோறும் அந்த மாட்டுக்கு உணவு வைக்கிறது, வாஞ்சையோடு இருக்குறதுனு பழகுனா ஆக்ஷன் காட்சிகள் எடுக்கும்போது சூர்யாவை ஒண்ணும் செய்யாது. அதனால தான் அந்த மாடுகள் எல்லாம் கொண்டு வந்து வளர்த்தாரு. இப்ப அந்த மாடுகளுக்கு எல்லாம் வயசாகிப் போச்சு. வேற மாடுகளைக் கொண்டு வந்து தான் பயிற்சி எடுக்கணும். சொல்ல முடியாது.

வேற மாடுகளைக் கொண்டு வந்து பயிற்சிகளை எல்லாம் கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. முழு காரணம் வெற்றி மாறன் தான். அவரு விடுதலை படத்துக்குப் போனாரு. பார்ட் 1னோடு வந்துடுவாருன்னு பார்த்தா, பார்ட் 2வுக்கும் போயிட்டாரு. இதுதான் அதுல ஏற்பட்ட பிரச்சனை. தயாரிப்பாளர் தாணுவும் வெற்றிமாறனைக் குறை சொல்ல முடியாது.

அவரால தான் படம் டிலேவா ஆயிடுச்சுன்னு சொல்ல முடியாது. அப்ப பழியைத் தூக்கிக் காளை மாட்டு மேல போட்டா அதால என்ன சொல்ல முடியும்? அதுக்கு என்ன தெரியப்போகுது? அதனால காளை மாட்டு மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் அமீர், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றி மாறன் இயக்கம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. அது தவிர ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதாலும் சூர்யா அதில் ஹீரோவாக நடிப்பதாலும் ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Next Story