முதல்முறையாக ரஜினியுடன் இணையும் சூர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் முதல் முறையாக இணையும் செய்தி இரு தரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகும்போது சில முக்கிய திரையரங்குகளில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் டீசரை வெளியிட தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

ரஜினி படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யா ஒன்றின் டீசர் வெளியாவது இதுவே முதல் முறை என்பதால் ரஜினி மட்டும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இந்த தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது முன்னதாக ‘தர்பார்’ திரைப்படத்தின் இடைவேளையின்போது பட்டாஸ் திரைப்படத்தின் டிரைலர் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உண்மை என்றால் ‘தர்பார்’ திரைப்படத்தின் இடைவெளியில் பட்டாஸ் மற்றும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு திரைப்படங்களில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram