15வது திருமண நாளை கொண்டாடிய சூர்யா ஜோதிகா - வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடியான சூர்யா ஜோதிகா இருவரும் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காதலிக்கும் பல காதல் ஜோடிகளுக்கு சூர்யா - ஜோதிகா pair சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர்.
புகுந்த வீட்டாரின் கட்டளைக்கு இணங்க திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை ஜோதிகா பின்னர் ரீ என்ட்ரி கொடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தங்களது 15 திருமண நாளை கொண்டாடும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யா இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் ஜோதிகாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 15 வருட மகிழ்ச்சி. "நீ என் ஆசீர்வாதம் ஜோ"
அனைவரின் அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றி. என கூறி பதிவிட்டுள்ளார்.