சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை கடந்த மார்ச் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஊரடங்கு காரணமாக வெளியிட முடியவில்லை. எப்படியும் ஜூன் மாதம் வரை ஊடங்கு செல்லும் என செய்திகள் பரவி வருவதால் சூர்யா இப்படத்தை அமேசான் பிரைமுக்கு விற்றிவிட்டார்.
எனவே, பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே மாதம் முதல் வாரத்தில் நேரடியாக இணையத்தில் வெளியாகவுள்ளது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படி அனைத்து திரைப்படங்களும் இணையத்தில் வெளியானால் தியேட்டர்களுக்கு லாபம் இருக்காது. எனவே, இந்த முடிவை சூர்யா கை விட வேண்டும். இல்லையேல், சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ உட்பட அவர் நடித்த எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…