சூர்யாவின் அறக்கட்டளையான அகரம் மூலம் உதவி பெற்ற நந்த குமார் என்பவர் இப்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் தான் சம்பாதிக்கும் பணத்தில் அகரம் என்ற கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான உதவிகளை செய்து வருகிறார். 10 வருடத்திற்கு முன்பு அகரம் அமைப்பின் சார்பில் ஏழை எளிய மாணவர்களை கண்டறிய விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா மூலம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதில் கலந்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவர் நந்தகுமார் மெடிக்கல் கட் ஆஃப் மார்க்காக 199 எடுத்து இருந்தாலும் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் மருத்துவம் படிக்க முடியவில்லை எனக் கூறினார். அவருக்கு மருத்துவம் படிக்க ஆகும் செலவு முழுவதையும் அகரம் ஏற்பதாக உறுதி அளித்தது. அதன் படி அவரை மருத்துவராக்கி உள்ளது அகரம். அந்த நந்த குமார் இப்போது மருத்துவராக கே.ஜி.பி. மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் சூர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற…
Good bad…
தனுஷ், நயன்தாரா…
Good bad…
பிரபல காமெடி…