மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பாக பெரிதாக எந்த செய்தியும் வெளியே கசியவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. இப்படத்தை போனிகபூருடன் இணைந்து தயாரித்து வந்த ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. மேலும், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் பணம் பெற்றே போனி கபூர் இப்படத்தை தயாரித்து வந்தாராம். தற்போது அவரின் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கி இருப்பதால் பண வரவு நின்று விட்டதாம்.
எனவே, தற்காலிகமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அனைத்தும் சரி செய்யப்பட்டு விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…