
தற்போது வரை இப்படத்தின் பரபர ஆச்ஷன் மற்றும் சண்டைக் காட்சிகளை மட்டுமே எடுத்துள்ளனராம். இப்படத்தில் அஜித் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார். எனவே, இப்படம் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சி படம் பிடித்துள்ளனர். அப்போது, ஒரு ரிஸ்க்கான ஒரு காட்சியை திலீப் சுப்பராயன் ஒரு டூப்பை வைத்து எடுத்துள்ளார். ஆனால், இதைக் கேள்விப்பட்ட அஜித் ‘ நான்தானே சம்பளம் வாங்குகிறேன். நான்தான் நடிக்க வேண்டும்’ எனக்கூறி அக்காட்சியை அவரே நடித்துக் கொடுத்தாராம்.