தமிழ் பிக்பாஸ் நடிகருக்கு இந்தியில் கிடைத்த வாய்ப்பு – அதுவும் தனுஷ் படத்தில் !

தமிழில் பிக்பாஸ் சீசன் 2 மூலம் புகழ்பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கும் பொல்லாதவன் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் வெற்றிக் கூட்டணியின் முதல் படமாக வந்து வெற்றி பெற்ற திரைப்படம் பொல்லாதவன். இந்தப் படம் தற்போது 12 வருடங்கள் கழித்து இந்தியில் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்த படத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரங்களில் பவன் நடித்த அவுட் கதாபாத்திரமும் ஒன்று. அந்த கதாபாத்திரத்தில் இப்போது கணேஷ் வெங்கட்ராம் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram