மகளுக்காக எதையும் செய்யும் ஷங்கர் - Nepotism'மால் நாசமாகப்போகும் தமிழ் சினிமா!

by adminram |

705569b0298e4d8c052913f58087503c-3

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர். பிரமிப்பூட்டும் கதை, பிரம்மாண்ட செட், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்கள் என தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் பின்னர் இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்களே இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய மற்றும் தயாரித்த அத்தனை படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அர்ஜுன் ஹீரோவாக நடித்த 'ஜென்டில் மேன்' படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த ஷங்கருக்கு ஈஸ்வரி என்கிற மனைவியும், ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் அதிதி சங்கர் ஆகிய 2 மகள்களும் அர்ஜித் என்ற மகனும் உள்ளார்கள். இதில் அவரின் இளைய மகள் தமிழில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுமாக உள்ளார். சூர்யா தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

64079e15eaf0491a9669ffd0545fca9b

இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. அதில் ஆளுமைபடைத்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். ஷங்கர் வீட்டு ஹீரோயின் என்பதால் தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். இனி பாலிவுட் காரர்கள் போலவே நம்ம தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்து திறமைகளுக்கு வாய்ப்பில்லாமல் போகும் என நெட்டிசன்ஸ் விமர்சிக்கின்றனர்.

Next Story