தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி – முதல்வர் கடிதத்திற்கு பின் மத்திய அரசு அறிக்கை!

தொல்லியல் துறையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.

மத்திய அரசு அறிவித்த தொல்லியல் கலிவிக்கான தகுதியான மொழிகள் பட்டியலில் பாலி, சமஸ்கிருதம், உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் ‘தொல்லியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு பயில தமிழ் மொழியும் சேர்க்கப்படவேண்டும். மற்ற மொழிகளைக் காட்டிலும் அதற்கு முன்னதாகவே தமிழ் மொழி என அறிவிக்கப்பட்ட ஒன்று.’ எனக் கூறியிருந்தார். அதையடுத்து இப்போது தமிழ்மொழியும் இணைக்கப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

Published by
adminram