தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேருக்குப் புதிதாக கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்குப் பின் அதிக நோயாளிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ‘தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்களின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஒருவர் அமெரிக்காவுக்கு சென்று வந்தவர். கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. அதனால் அச்சப்பட தேவையில்லை’ எனக் கூறியுள்ளார்.
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…
Aishwarya Rai: சினிமாவில்…
Biggboss Tamil:…
Game Changer:…