தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் பீதி தற்போது இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 41 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்திலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் டிவிட்டரில் ‘நம் மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபரின் ரத்தத்தில் கொரோனா வைரஸ் இல்லை. அவர், இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், மருத்துவர்களின் நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…