ரசிகர்கள் பாராட்டில் தம்பி – தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் !

கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியான தம்பி திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கைதி வெற்றிக்குப்பின் கார்த்தி திரிஷ்யம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தம்பி என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ஜோதிகா, சத்யராஜ் மற்றும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று காலை வெளியான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக உள்ளதாகவும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வண்ணம் உள்ளதாகவும் பாராட்டி வருகின்றனர்.

இச்செய்தி தயாரிப்பாளர்களுக்கு முயற்சி அளித்திருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இது உடனுக்குடன் வெளியானதால் படத்தின் வசூல் பாதிக்கும் என தெரிகிறது. ஆனாலும் தரமான படத்தை ரசிகர்கள் தியேட்டரில் வந்து ரசிப்பார்கள் என்றும் நம்பிக்கையாலும் கிறிஸ்துமஸ் விடுமுறையை தொடங்கியுள்ளதாகவும் படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று சொல்லப்படுகிறது.

Published by
adminram