தமிழ் ராக்கர்ஸ், வாட்ஸ் ஆப்… இப்போ கேபிள் டிவி – தர்பார் படத்துக்கு அடுத்த சிக்கல் !

தர்பார் திரைப்படம் மதுரை திருமங்கலத்தில் உள்ள லோக்கல் கேபிள் சேனலில் ஒளிபரப்பப் பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தர்பார் படம் வெளியானதில் இருந்து அடுக்கடுக்காக சிக்கல்களை எதிர்கொனு வருகிறது. எதிர்மறை விமர்சனங்களால் வசூல் குறைந்தது, தமிழ் ராக்கர்ஸில் வெளியானது மற்றும் வாட்ஸ் ஆப்பில் வெளியானது என பிரச்சனைகள் பூதாகாரமாக எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது லோக்கல் கேபிள் சேனலிலும் தர்பார் படத்தை திருட்டுத் தனமாக ஒளிப்பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு மதுரையில் உள்ள திருமங்கலம் பகுதியில் உள்ளூர் கேபிளில் இப்படம் ஒளிபரப்பியதாகத் தெரிகிறது. இது சம்மந்தமாக லைகா நிறுவனம் சார்பில் மதுரை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
adminram