சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான டகால்டி திரைப்படம் அதற்குள்ளாகவே இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவை பிடித்திருக்கும் தலைவலியாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்கள் உள்ளன. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது போன்ற இணையதளங்களை முடக்க முடியவில்லை. பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் முதல் நாளிலேயே இதுபோன்ற இணையதளங்களில் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சந்தானம் யோகி பாபு நடிப்பில் நேற்று வெளியான டகால்டி திரைப்படம் பாஸிடிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ள வேளையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…