தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 21ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக நீட்டிக்கப்பட்டது. அதேநேரம், கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடை, டாஸ்மாக் கடை, அழகு நிலையங்கள், மிதி வண்டி மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இ-பாஸ் பதிவுடன் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோன தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகள் அறிவிக்கபப்ட்டது.
தற்போதுள்ள ஊரடங்கு 21ம் தேதி காலை 6 மணியோடு முடிவடைவதால், மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…