தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.. ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஜூன் 28ம் தேதி காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது மேலும் ஒரு வாரம், அதாவது, ஜூலை 5ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திற்கும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

Published by
adminram