இன்று முதல் விலையேறும் டாஸ்மாக் சரக்குகள்… ’குடி’மகன்கள் வருத்தம்! – எவ்வளவு தெரியுமா?

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து சரக்குகளின் விலையும் இன்றுமுதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தன்னுடையக் கட்டுப்பாட்டில் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் மிக முக்கியமானத் துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தாலும் குடிகாரர்கள் தினமும் கடையை மொய்த்த வண்ணமே உள்ளனர்.

இந்நிலையில் அரசு சரக்குகளின் விலை இன்றுமுதல் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பியர் மற்றும் குவார்ட்டர் (180மிலி) சாராயம் 10 ரூபாய் விலையும், ஆஃப் (360மிலி) 20 ரூபாய் விலையும், புல் 650(மிலி) விலை 40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குடிமகன்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram