இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு 6 நாட்களைக் கடந்துள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே குடி அடிமைகளால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து சரக்குகளை திருட முயற்சி செய்யப்படுகின்றன.
அதோடு இல்லாமல் தமிழகத்தில் சில இடங்களில் மது கிடைக்காததால் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். கேரளாவிலும் இந்த எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட இருக்கிறது என சமூகவலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
இதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஏப்ரல் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என பரவும் செய்திகள் உண்மையில்லை. அது வெறும் வதந்திதான். அது போன்ற வதந்திகளைப் பரப்புவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…