உடலில் டாட்டூ…. சந்தேகக் கணவன்.. சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…

சென்னை புழல் பகுதியில் வசித்து வருபவர் வெற்றிவீரன்(48). அவரின் மனைவி சஜினி(39). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள்.ஒருவர் கல்லூரியிலும், ஒருவர் பள்ளியிலும் படித்து வருகின்றனர். சஜினி பியூட்டர் பார்லரில் பணிபுரிந்து வருகிறார் . 

இந்நிலையில், சஜினியின் மீது வெற்றிவீரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால், 6 வருடங்களுக்கு முன்பு சஜினி கோவையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். மகள்கள் இருவரும் வெற்றிவீரனுடன் வசித்து வந்தனர். 

இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு கோவை சென்று சஜினியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். நேற்று இரவு சஜினி உடலில் டாட்டு வரைந்திருப்பதை கண்டு இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வெற்றி கத்தியால் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அதன்பின் புழல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram