இந்த படத்தின் தயாரிப்பில் கேஜேஆர் ஸ்டுடியோ இணைந்தவுடன் தற்போது சுறுசுறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மிக அதிகம் இருப்பதால் இந்த படம் இவ்வருட இறுதியில் தான் வெளியாகும் என தெரிகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தெரிகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் இரண்டு வேடங்களில் கூட எந்தப் படத்திலும் நடித்ததில்லை என்ற நிலையில் நேரடியாக அவர் மூன்றாவது வேடத்திற்கு தாவியுள்ளதாக கூறப்படுகிறது
இந்த படம் வேற்றுக்கிரக மனிதர்கள் குறித்த கதை அம்சம் என்பதும் இந்தப் படத்தில் வருகிற வேற்றுகிரக மனிதர், பூமியிலுள்ள சராசரி மனிதர் மற்றும் சயின்டிஸ்ட் ஆகிய 3 கேரக்டர்களின் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தெரிகிறது. மேலும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இந்த படம் ஒரு திருப்பத்தை கொடுக்கும் அளவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக 5 பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் விரைவில் அவர் பின்னணி இசை பணியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…