சேட்டை செய்த மாணவன் … பிறப்புறுப்பை பிடித்த ஆசிரியர்கள் – மருத்துவமனையில் அனுமதி !

கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குறும்பு செய்த மாணவர் ஒருவரின் பிறப்புறுப்பை பிடித்ததாக ஆசிரியர்கள் மேல் புகார் எழுந்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள தனியர் பள்ளி ஒன்றில் பீகாரைச் சேர்ந்த மாணவர் படித்து வந்துள்ளார். இவர் வகுப்பறையில் சேட்டை செய்ததால் கோபமான ஆசிரியர் மற்றும் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 4 பேர் வகுப்பறையின் கதவை சாத்திவிட்டு அவரது பிறப்புறுப்பை பிடித்து அழுத்தியுள்ளனர்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாணவன் போலிஸீல் அளித்த புகாரில் ‘ தன்னை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பரப்புவோம் என மிரட்டுகின்றனர்’ எனக் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
adminram