துப்பறிவாளன் 2 திரைப்படம் கடந்த வருடம் துவங்கப்பட்டது. விஷாலே இப்படத்தை தயாரித்து வந்தார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்திலிருந்து விலகுவதாக மிஷ்கின் அறிவித்தார். மேலும் அப்படத்தை இயக்க அவர் 15 கண்டிஷன்களை கூறிய கடிதமும் வெளியானது. அதோடு, அப்படத்தை விஷாலே இயக்கவுள்ளார் என்கிற செய்தியும் வெளியானது.
இது தொடர்பாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட விஷால், 13 கோடி செலவு செய்த பின் மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகி விட்டார். கதை எழுத மட்டும் 35 லட்சம் செலவு செய்தேன். மிஷ்கினுக்கு வேறு எந்த தயாரிப்பாளரும் இரையாகக் கூடாது. இப்படத்தை நானே இயக்க முடிவெடுத்துள்ளேன் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒரு பட விழாவில் பேசிய மிஷ்கின் ‘ இப்படத்தில் கதை எழுத 7 லட்சம் மட்டுமே செலவு செய்தேன். ஒருவருடம் செலவு செய்து என்னை உருக்கி கதை எழுதினேன். இந்த கதையை கேட்டு விஷால் அழுதான். வேறு தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க முன் வந்தார். ஆனால், நானே தயாரிக்கிறேன் என விஷால் கூறினான். நான் தடுத்தும் அவன் கேட்கவில்லை. 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அதிக பட்சம் ரூ. 10 கோடி வரை செலவு ஆகியிருக்கும். ஆனால், அதிகமாக செலவு ஆகிவிட்டது என விஷால் கூறியதை நிரூபிக்க வேண்டும்.
திடீரென கதை நன்றாக இல்லை எனக்கூறினான். அவரின் நண்பர்கள் நந்தாவும், ரமணாவும் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் படத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தேன். அப்போது என்னை வேசி மகன் என திட்டினான். இதை தட்டிக்கெட்ட என் தம்பியை அனைவரும் சேர்ந்து அடித்தனர். அவனை தம்பியாக நினைத்தேன். அவன் ஒரு பொறுக்கி. அவனை தமிழ்நாட்டிடமிருந்து நான் காப்பாற்றினேன். இனிமேல், அவனிடமிருந்து தமிழ்நாட்டை நான் காப்பாற்ற வேண்டும். இனிமேல்தான் அவனுக்கு ஆப்பு இருக்கு. உன்னிடம் தர்மம் இருந்தால் வா குருஷேத்திர போருக்கு. நான் ரெடி’ என ஆவேசமாக மிஷ்கின் பேசியுள்ளார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…