More

மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்க்க சொல்லி சோதனை – எதற்குத் தெரியுமா?

குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைக்கு அழைத்துச் சென்று உள்ளாடைகளைக் களையச் சொல்லி சோதனை நடத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Advertising
Advertising

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் எனும் பகுதியில் ’ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் ஒரு கோவில் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதனால் இன்னமும் சில மூட நம்பிக்கை பழக்க வழக்கங்கள் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அங்கு பயிலும் மாணவிகள் தங்கள் மாதவிடாய் நாட்களில் சக மாணவியரை தொட்டு பேசக்கூடாது மற்றும் எல்லோருடனும் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது போன்ற பழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றை சில மாணவிகள் கடைபிடிக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த ஆசிரியைகள் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவிகள் அனைவரையும் தனித்தனியாக கழிவறைக்கு அழைத்துச் சென்று மாதவிடாய் இருக்கிறதா என சோதிப்பதற்காக அவர்கள் உள்ளாடைகளைக் கழற்றி சோதனை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் மையத்தின் வாயிலில் போராட்டம் நடத்தினர்.

இது சம்மந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணை செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாணவியும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts