3 படம் போதும்!.. சூர்யா பட இயக்குனருடன் கை கோர்க்கும் தல அஜித்... பரபர அப்டேட்....

by adminram |

a6f545bbf6f9c2c39f5cfd2f37e7cae9-2

நடிகர் அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியவர். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவில் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின் இப்படம் முழுவதுமாக முடிவடைகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கவுள்ளார்.

43a8f995aa19de36cb44942cbced1cea

இதற்கிடையில் சூர்யாவை வைத்து ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. ஆனால், அதன்பின் அதுபற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது சுதா கொங்கரா - அஜித் இணையும் படத்தின் வேலைகள் சூடுபிடித்துள்ளது.

507008d898c6a4d2726eea59f5e6ec03

சுதா கொங்கரா அடுத்து பாலிவுட்டில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார். அஜித்தும் வினோத் இயக்கத்தில் அடுத்த புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களின் வேலைகளும் முடிந்த பின் சுதா கொங்கரா - அஜித் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ‘விஸ்வாசம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story