மாஸ் காட்டும் தல அஜித் - வைரலாகும் துப்பாக்கி சுடும் வீடியோ....

by adminram |

64d34887368cb96817a5e6e21f499831-1

நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ் ஓட்டுவது, சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர் 2 வருடங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் அஜித்தும் இடம் பெற்றார். அப்போதே அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியது.

80d5cc0d29e85d196cd20e353af5c6ab-2

இந்நிலையில், மீண்டும் துப்பாக்கி சுடும் விளையாட்டில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story