More

ஒரு வருடத்திற்கு பின் #Valimai ஹேஷ்டேக் – தல ரசிகர்களிடம் சிக்கிய போனிகபூர்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படம் துவங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அப்படம் தொடர்பாக எந்த அப்டேட்டையும் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் பகிர்ந்து கொள்வதில்லை.

Advertising
Advertising

இது அஜித் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொடர்ந்து அவரிடம் வலிமை அப்டேட் கேட்டு டிவிட்டரில் அவரை திட்டி வருகின்றனர். ஆனாலும், மனிதர் வாயை திறப்பதில்லை.

இந்நிலையில், மாரி2 படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் யுடியூப்பில் 100 கோடி பார்வையாளர்களை பெற்றதற்கு யுவன்சங்கர் ராஜாவுக்கு டிவிட்டரில் அவர் வாழ்த்து கூறியிருந்தார். அப்போது, #Valimai ஹேஷ்டேக்கை அவர் பயன்படுத்தியிருந்தார்.

இதைக்கண்ட தல அஜித் ரசிகர்கள் ‘இப்போதுதான் போனிகபூரூக்கு தான் வலிமை பட தயாரிப்பாளர் என்கிற ஞாபகம் வருகிற போல’ என்கிற ரேஞ்சில் பல மீம்ஸ்களை போட்டு  அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

 

 

 

Published by
adminram

Recent Posts