Categories: latest news rajini kamal ramkumar balakrishnan thalaivar173

தலைவர் 173 படத்துக்கு எமனாக வந்த சிம்பு!.. பொறந்தநாளுக்கு அப்டேட் வராது போலயே!…

ரஜினியின் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை டிக் செய்தார் ரஜினி. இது தொடர்பான அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்கிறார்கள்..

இந்நிலையில்தான் இந்த படத்திற்கு சிம்பு ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளார். சிம்புவின் 47வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாகவும், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிம்புவால் இந்த படம் டேக்ஆப் ஆகவில்லை. அதனால்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போனர் சிம்பு.

ரஜினி 173 படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியதும் அந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்த டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் ராம்குமார் பாலகிருஷ்ணனை ரஜினியிடம் கதை சொல்ல அனுப்பியிருக்கிறார்.  ஆனால் கதை பிடித்துவிட்டதால் அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டார் ரஜினி.

இதில் ஆகாஷ் பாஷ்கரன், ரெட் ஜெயன்ட் இருவருமே அப்செட். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே ராம்குமார் கமிட்டாகி இருந்ததால் அந்நிறுவனத்திடம் NOC கேட்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம். ஆனால் அப்படி NOC  கொடுத்துவிட்டால் சிம்புக்கு கொடுத்த அட்வான்ஸை திரும்பி வாங்க முடியாது.

ஏனென்றால் ‘நான் கால்ஷீட் கொடுக்க ரெடி. ஆனால், நீங்கள் அதற்குள் படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள்’ என சொல்லிவிட்டு சிம்பு கம்பி நீட்டிவிடுவார் என டான் பிக்சர்ஸ் நினைக்கிறது. ஏனெனில் சிம்புவிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவது மிகவும் கடினம். எனவே சிம்புவிடமிருந்து அட்வான்ஸை வாங்கிய பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு NOC  கொடுக்கலாம் என டான் பிக்சர்ஸ் நிறுவனம் நினைக்கிறதாம்.

இதில் சிக்கல் என்னவென்றால், ரஜினியின் 173வது படத்தை அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்குள் சிம்பு அட்வான்ஸை திருப்பி கொடுத்து, டான் பிக்சர்ஸ் நிறுவனம் NOC  கொடுத்து.. நடக்குமா என்பது தெரியவில்லை.. எனவே தலைவர் 173 பட அறிவிப்பு டிசம்பர் 12ம் தேதி வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Published by
ராம் சுதன்