More

படம் எடுக்க சொன்னா short film எடுத்திருக்காங்க…. தலைகவிழ்ந்தது “தலைவி”!

சூப்பர் ஸ்டார் கதாநாயகி, காதல் ராணி மற்றும் ஆணாதிக்க அரசியல் அமைப்பு இருந்த போதிலும் அதிகாரத்திற்கு எதிராக போராடி அரியணையில் அமர்ந்து தமிழ் மக்களின் இதயத்தில் இடம் பிடித்த பெண் சிங்கத்தின் கர்ஜனை மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படம் குறித்த விமர்சனத்தை இந்த தொகுப்பில் காணலாம். 

Advertising
Advertising

ஏ.எல்.விஜய் இயக்கதில்  கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த் சுவாமி எம்.ஜி.ராமச்சந்திரனாகவும் நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது. சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா, தம்பி ராமைய்யா, சண்முகராஜா, பூர்ணா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

பெரும்பாலும் ஜெயலலிதாவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மக்களுக்கு தெரிந்தவையே தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கும் என நம்பி படம் பார்த்தால் அட இது தெரிஞ்சது தானே என தோன்றிவிடுகிறது. அத்தோடு கெளதம் மேனன்  இயக்கிய குயின் வெப் சீரிஸ் நம்ம ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏற்கனவே காண்பித்து விட்டது. 

தலைவி சிரமப்படும் இளமை கால கட்டம் மற்றும் எம்ஜி  ஆர் உடனான உறவை மட்டுமே கதை சொல்கிறது. மெல்லமெல்ல எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகி திரைத்துறையின் உச்சத்திற்கு வருகிறார் ஜெ. பின்னர் அரசியலில் நுழைய அவர்களின் உறவும் நெருக்கமாகிறது. ஆனால், சத்யா மூவிஸைக் கவனித்துக்கொண்டிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இந்த நெருக்கம் பிடிக்கவில்லை. 

இதனால் சதி வேலைகள் நடக்கிறது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவு ஏற்ற இறக்கமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆர். மரணமடைகிறார்.  ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு சொந்த வாழ்விலும் அரசியல் போட்டியிலும் என்னென்ன நடந்தது என்பதை இந்த திரைப்படம் கூற மறந்துவிட்டது.   

அவரது திரைப்பயணமும், எம் ஜி ஆர் உடனான உறவை மட்டுமே கூறியிருக்கும் இயக்குனர் இதனை ஒரு குறும்பட கதை போன்றே எடுத்திருக்கிறார். மக்கள் பெரிதும் எதிர்பார்த்தது ஜெயலிதாவுக்கும் சசிகலாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை மற்றும் ஜெயலலிதா மரணிப்பதற்கு முன்பும், மருத்துவமனையில் இருந்தபோது நடத்த அரசியல் தில்லுமுள்ளும் படத்தில் இல்லை. எனவே எதிர்பார்த்தது தலைவி படம் பூர்த்தி செய்யவில்லை. 

அதோடு இத்தனை வருடங்களாக நாம் நம்பிக்கொண்டிருந்த சில வரலாற்று சம்பவங்கள் இந்த படத்தில் மாற்றி கூறியுள்ளனர். அதாவது, ஜெயலிதாவிடம் ஆசையுடன் விருந்துக்கு வருகிறேன் உணவு சமைத்து வை என கூறிய எம்ஜி ஆர் பின்னர் காத்திருந்த ஜெ.வுக்கு அவரின் இறப்பு செய்தியே வந்தது. ஆனால் The Lone Empress புத்தகத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு தொலைபேசி இணைப்பு முதல்வரின் ஆணைப்படி  டிசம்பர் 23ஆம் தேதிஏ துண்டிக்கப்பட்டது என்றிருக்கும். 

படத்தின் மைனஸ்: 

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் இதுவரை வெளிவராத யாருக்கும் தெரிந்திராத கதை கூறுவார்கள் என எதிர்பார்த்தால் இயக்குனர் சர்ச்சையான சம்பவங்களை வசதியாக தவிர்த்துள்ளார். அதோடு சசிகலா தவிர ஜெயலலிதா உடன் இருந்த எத்தனையோ முக்கிய கேரக்டர்களை காட்டவேயில்லை. கங்கனா நிறைய இடத்தில் ஜெ.ரோலுக்கு பொருந்தாமல் போய்விட்டார். டப்பிங்க் கங்கனாவுக்கு சரிப்பட்டு வரவில்லை. 

படத்தின் ப்ளஸ்

நடிகர் அரவிந்த் சுவாமி எம் ஜிஆர் ஆக பக்காவாக பொருந்தினார். கலை இயக்கம் நிஜத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக ஜெ. மற்றும் MGR வீடு உள்ளிட்டவை.  ஒளிப்பதிவு மற்றும் இசை நன்றாக அமைந்திருக்கிறது. 

குறிப்பு: இதை ஜெவின் வாழ்க்கை வரலாறு படம் என எதிர்பார்த்து பார்ப்போர் ஏமாந்து போவார். உண்மை பல இடங்களில் காணாமல் போய்விட்டது. படத்தின் மதிப்பு 3/5. 

 

Published by
adminram

Recent Posts