More

ஒருவழியா பஞ்சாயத்து எல்லாம் முடிஞ்சது.. தியேட்டரில் வருகிறது தலைவி!!

அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஏ.எல்.விஜய். இது மோகன்லால் நடித்த மலையாளப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஆவார்.

கிரீடம் படத்தின் வெற்றியைற்தொடர்ந்து இவர் பொய் சொல்லப்போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தலைவா உட்பட பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய பல படங்கள் இவருக்கு வெற்றியைத் தேடித்தந்த. கடைசியாக இவர் இயக்கத்தில் தேவி 2 படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் அரவிந்தசாமி, கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கியுள்ளார். இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இதில் கங்கனா ஜெயலலிதாவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு கி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இந்த மாதம் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்கில் படம் வெளியாகும் என கூறப்பட்டது. படம் வெளியாகி 2 வாரங்களில் ஓடிடி-யில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தியேட்டருக்கு நஷ்டம் வரும் என படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்தன. 

இதையடுத்து இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக படம் வெளியாகி ஒரு மாதம் கழித்துதான் ஓடிடி-யில் வெளிப்படவேண்டும் என்பது வழக்கத்தில் இருந்தது. தற்போது இரண்டு வாரத்தில் வெளியாகும் என அறிவித்ததால் தியேட்டருக்கு லாபம் இல்லை என கூறினார்கள்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்கு பின்னரே படத்தை ஓடிடி-யில் வெளியிட ஓடிடி தளங்கள் ஒப்புக்கொண்டன. பேச்சுவார்த்தை சுலபமாக முடிந்ததால் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
 

Published by
adminram

Recent Posts