More

தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – இது செமயா இருக்கே…

விஜய் புதிதாக நடிக்கவுள்ள திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். ஏற்கனவே முருகதாஸ் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்படத்திலிருந்து அவர் விலக தற்போது நெல்சன் கூறிய கதையில் நடிக்கிறார் விஜய். இது ஒரு காமெடி கதை எனக்கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இது படக்குழு உருவாக்கியது அல்ல, இதை விஜயின் ரசிகர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என்பது பின்னரே தெரியவந்துள்ளது. ஆனாலும், ஒரிஜினல் போலவே அதை அந்த ரசிகர் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

இப்போதெல்லாம், ரசிகர்கள் உருவாக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு ஆச்சர்யத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts