அட்வான்ஸாக வெளியாகும் தளபதி65 ஃபர்ஸ்ட் லுக்.. விஜய் ரசிகர்கள் வெறித்தனம்….

Published on: June 18, 2021
---Advertisement---

84750d0b71e7f7e343c8d6c931ad25e4

‘மாஸ்டர்’ படத்திற்கு பின், நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  ஜார்ஜியாவில் நடந்தது. தற்போது, கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் துவங்கவுள்ளது.

வருகிற 22ம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். எனவே, அன்று தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, நேற்று முதலே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Thalapathy65FirstLook என்கிற ஹேஷ்டேக்குடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களாகவே பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். அதோடு, இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், டார்கெட் என்கிற தலைப்பை விஜய் ரசிகர்களே சூட்டிவிட்டனர். அதற்கான போஸ்டர்களையும் அவர்களே உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

9a803e5f6485e0b2fef78e0ff4e4d8b2

அதோடு, விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டருக்காக காமன் டிபி உருவாக்கி அதை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பலரும் அந்த டிபிஐ தங்களின் டிவிட்டர் பக்கத்தின் புரஃபைல் படமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், #Thalapathy65FLon21st என்கிற ஹேஷ்டேக்கையும் அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Leave a Comment