More

மாஸ்டர் மாதிரி ஆகிவிடக்கூடாது! – அதிரடி முடிவெடுத்த தளபதி 65 டீம்…

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் துவங்கியுள்ளது. தளபதி 65 என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.  இப்படத்தை சன் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, திட்டமிட்டதை விட விரைவாக படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

கொரோனா மிகவும் அதிகரிக்கும் நிலையில், தியேட்டர்கள் மூடப்பட்டு மாஸ்டர் திரைப்படம் ஒரு வருடம் ரிலீஸாகாமல் கிடப்பில் கிடந்தது போல் தளபதி 65 படத்திற்கும் ஆகி விடக்கூடாது என கருதும் படக்குழு கெடுபிடிகள் அதிகம் விதிக்கும் முன்னரே படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
 

Published by
adminram

Recent Posts