கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். எனவே, தங்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பலரும் பலவிதமாக உரையாடி வருகின்றனர். டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உடனடியாக பதிலளித்து பலரையும் கவர்ந்து வருகிறது.
சமீபத்தில் ‘மரத்திலிருந்து தேங்காய் பறித்து வியாபாரம் செய்யலாமா?’ என ஒருவர் கேள்வி கேட்க ‘தாராளமாக செய்யுங்கள் தம்பி’ என பதிலளித்திருந்தார். அதேபோல், தன்னுடைய தாயின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என ஒருவர் புலம்ப அவருக்கு பழனிச்சாமி ஆறுதலும் கூறியிருந்தார்.
இப்படி தொடர்ந்து அவர் பொதுமக்களின் கருத்துகளுக்கு பதிலளித்து வருவதால் ‘எளிமையான முதல்வர்’ என அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…