நெய்வேலிக்கு நன்றி…..தெறிக்கவிட்ட விஜய்… வைரலாகும் புகைப்படம்….

Published on: February 10, 2020
---Advertisement---

f2c46ecd1ea658056930c395881d9481

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பிற்காக நெய்வேலியில் இருக்கிறார். நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அவரைக் கான அவரின் ரசிகர்கள் தினமும் அங்கு குவிந்து வருகின்றனர். படப்பிடிப்பு முடிந்து அவர் வெளியே வரும் போதும், உள்ளே செல்லும் போது அவரைக்கண்டு கையைசத்து கத்தி கதறி தங்களின்  மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

நேற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். எனவே அங்கு வந்த விஜய் ஒரு வேனின் மீது ஏறினார். அதன் பின் செல்போனில் ரசிகர்களுடன் செல்பியும் எடுத்தார். இதைக்கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அவர்களும் தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்தனர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

+இந்நிலையில், ரசிகர்களின் பின்னணியில் எடுத்த செல்பியை விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ’நெய்வெலிக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment