குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று கல்லூரி மாணவிகள் தங்கள் வீடுகளில் கோலம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கோலத்தின் மூலம் ஒரு நாட்டின் அரசையே அச்சப்பட வைக்க முடியும் என்பதை கல்லூரி மாணவிகள் நிரூபித்ததாக நெட்டிசன்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் அரசின் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டதற்காக 6 கல்லூரி மாணவிகள் நேற்று கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து கோல விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து வழக்கம்போல் திமுகவும் இந்த ஐடியாவை கையிலெடுத்தது. நேற்றே திமுகவின் முக்கிய தலைவர்களின் வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட நிலையில் இன்று முக ஸ்டாலின், கனிமொழி, கருணாநிதி ஆகியோரின் வீடுகள் உள்பட அனைத்து திமுகவினரின் வீடுகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கோலம் போடப்பட்டது
கோலம் போடுவது மூடநம்பிக்கை என்று பேசி வந்த திமுகவினர் இன்று விழுந்து விழுந்து கோலம் போட்டது ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: மூடநம்பிக்கை பேசிய நாத்திகவாதிகளை கோலம் போட வைத்து, மத கட்சி பேதமின்றி தேசீயக்கொடியை ஏந்த வைத்து, நம் இந்திய திருநாட்டை ஒன்று படுத்திய நம் பிரதமருக்கு நன்றி சொல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
1960களில் தமிழ்நாட்டு…
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…