அந்த பையன் என் பேரன் மாதிரி… திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம்…

அங்கு யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்காக அவர் சென்றிருந்தார்.அப்போது, கோவில் சாமி கும்பிட செல்லும் முன் அங்கு நின்றிருந்த ஒரு ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்ட சொன்னார். அப்போது அங்கு அரசு அதிகாரிகள் இருந்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியான உடனேயே சர்ச்சை எழுந்தது.

நாட்டின் மலைவாழ்/பழங்குடியின மக்களை அரசும் அதிகார வர்க்கமும் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்பாடு அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது!.. பதவி போதை! என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன் ‘அந்த பையன் என் பேரன் மாதிரி. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்றுதான் அந்த சிறுவனை அழைத்தேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.’ என தெரிவித்துள்ளார்.

Published by
adminram