அந்த படம் குப்பை… கருத்து சொல்லனுமா? – பொசுக்குன்னு சொல்லிட்டாரே நவீன்!

இயக்குனர் மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த டிரெய்லரில் சாதியை தூக்கிப்பிடித்து பல வசனங்கள் வைக்கப்பட்டிருந்ததாலும், நாடக காதல் பற்றி பேசியிருந்ததாலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பலரும் இப்படத்தை ஆதரித்தனர். அதேநேரம், சாதி வெறியை தூண்டும் வகையில் இப்படம் அமைந்திருப்பதாக ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், மூடர் கூடம் நவீனிடம் நெட்டிசன் ஒருவர் இப்படம் பற்றி உங்கள் கருத்து என்ன எனக்கேட்டிருந்தார். இதற்கு பதில் கூறிய நவீன் ‘குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா?’ என பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட சாதி பற்றாளர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Published by
adminram