அந்த உறவு சரியல்ல….என்னை காயப்படுத்தி விட்டனர்.. தர்ஷன் உருக்கம்….

2ffe5fc672f39e87dac200c28a964427

பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், இதுபற்றி எதுவும் பேசாமல் இருந்த தர்ஷன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இருவர் தொடர்புடைய உறவில் ஒருவர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அந்த உறவு நிலைக்காது.  மகிழ்ச்சி இல்லாத உறவு நிலைக்காது. இந்த விவகாரத்தில் என்னை பற்றி தவறான கருத்தை சமூக ஊடகங்களில் கூறினர். அவை எதுவும் உண்மை அல்ல. அதனால் நான் மிகவும் காயமடைந்தேன். அதிலிருந்து மீள சில நாட்கள் ஆனது. தற்போது நிறைய கற்றுக்கொண்டேன்.  எனவே எனது கேரியரில் கவனம் செலுத்துவேன். எனக்காக ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment