More

அரசு எடுத்த நடவடிக்கை… கட்டுக்குள் கொரோனா.. முன்னோடியாக விளங்கும் தமிழகம்

எந்த ஒரு மாநிலத்தில் 5 சதவீதத்திற்கும் கீழாக கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரோ அம்மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக உலக ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர். 

Advertising
Advertising

தமிழகத்தை பொறுத்தவரை 4.95 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னோடியாக திகழ்கிறது. 

தமிழகத்தில் முக்கிய நகரங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, இந்தியாவிலேயே RT – PCR பரிசோதனையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.  இதற்காக சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு தனிமைப்படுத்துதலுடன் கூடிய சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை இந்தியாவின் சிறந்த மருத்துவமனை என விருது பெற்றுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 90 சதவீத நுரையீரல் பாதிப்படைந்தவர்களையும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

மேலும், அம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் வசதி, நடமாடும் கொரோனா பரிசோதனை திட்டம், வீடுகளி சென்று நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்தல்,கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் வைட்டமின் நிறைந்த உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.  

ஆனால், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் தமிழகத்தை கேரளாவுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த 12 நாட்களில் புதிதாக தினசரி நோய்த்தொற்றுக்கள் கேரளாவில் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts