அந்தவகையில் நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற இடத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்கு பணமில்லாமல் தவித்து வந்துள்ளார். ஏர் உழுவதற்கு வாடகை மாடு வாங்க கூட பணமில்லாததால் தனது இரண்டு மகள்களை உதவியாக கொண்டு நிலத்தில் ஏர் உழுதுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவில் அவரது இரண்டு மகள்கள் காலை மாடு போல் ஏர் கலப்பையை பிடித்துக்கொண்டு தள்ளாடி முன்னே செல்ல அவரது தந்தை அதனை அழுத்தி பிடித்து உழுகிறார். பின்னர் மனைவி விதை விதைத்து வந்த இந்த வீடியோவை கண்ட நடிகர் சோனு சூட் “:நாளை காலை அந்த விவசாயி வீட்டின் முன் இரண்டு காளைகள் நிற்கும். மேலும், அந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கும் தான் முழு பொறுப்பு என்றும் வாக்குறுதி கொடுத்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் சோனு சூட். ஆம், காளை மாடுகள் வாங்கி தருகிறேன் என்று சொன்ன நடிகர் சோனு சூட் இன்று விடிவதற்கு ஒரு புதிய டிராக்டரை வாங்கி அந்த விவசாயிக்கு கொடுத்துள்ளார். அவரது வாசலில் சோனு சூட் வாங்கி கொடுத்த புத்தம் புது டிராக்டர் நின்றது. இதையடுத்து விவசாயி குடும்பத்தினர் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற…
Good bad…
தனுஷ், நயன்தாரா…
Good bad…
பிரபல காமெடி…