More

கும்பலாக நிற்காதீர்கள் எனக் கூறிய நடிகர்! கொலை மிரட்டல் விடுத்த கும்பல்!

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது கூட தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனால் பலரும் இதைப் பின்பற்றுவதில்லை.

Advertising
Advertising

இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்துவரும் ரியாஸ்கான் தனக்கு ஒரு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் வசித்து வரும் அவரது வீட்டருகே கும்பலாக நின்றவர்களிடம்

 ஊரடங்கு நேரத்தில் கும்பலாக நிற்க கூடாது என்றும் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க தனி மனித இடைவெளியைக் கடைபிடியுங்கள் எனவும் கூற அவரது பேச்சை மதிக்காத கும்பல் அவரை அடிக்க முயற்சி செய்துள்ளது. மேலும் அதில் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக ரியாஸ்கான் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts