நக்மாவை பீல்டு அவுட்டாக்கிய கவர்ச்சி நடிகை... ஸ்கெட்ச் போட்டு தூக்கியது யார் தெரியுமா?

by ராம் சுதன் |

90களில் கவர்ச்சியாக வலம் வந்த நடிகை நக்மா. இவர் திரையில் தோன்றினால் போதும். அவரைப் பார்ப்பதற்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. முதன் முதலாக காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடி போட்டார். அவர் வரும் இடமெல்லாம் அழகு தான்.

படத்திலும் ரசிகனின் அதே ஃபீலிங்கை பிரபுதேவா காட்டியிருப்பார். அவர் சாப்பிட்டு வீசிய குச்சி மிட்டாய்களின் குச்சியைக் கூட சேகரித்து பத்திரமாக வைத்திருப்பார். கோபாலா கோபாலா பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் நம்மை இருக்கையில் கட்டிப் போட்டு விடும்.

இந்தப் படத்தின் இமாலய வெற்றி சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நக்மாவை ஜோடி சேர வைத்தது. பாட்ஷா படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 'ஸ்டைலு ஸ்டைலு தான்' பாடலுக்கு நக்மா ரஜினியுடன் ஆட்டம் போடும்போது தங்கமென ஜொலித்தார்.

'நீ நடந்தால் நடையழகு' பாடல் எல்லாம் வேற லெவலில் இருந்தது. இதுல ஹைலைட் என்னன்னா சூப்பர்ஸ்டாரே நக்மாவைப் பார்த்து ஒரு பாடலில் 'நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல' என்று பாடியிருப்பார். அது தான் 'தங்க மகள் என்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தாள்' பாடல். இனி இப்படி ஒரு பாடல் வருமா என்பது சந்தேகமே.

அதே போல சரத்குமார், நக்மா காம்பினேஷன் மாஸாக இருந்தது. ரகசிய போலீஸ் படத்தில் ஜோடி இளம் ரசிகர்களைத் தெறிக்கவிட்டது. 80ஸ் குட்டீஸ்களுக்கு நக்மா படம் பார்த்து விட்டு வந்தாலே அன்றைய தூக்கம் தொலைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

'உள்ளத்தை அள்ளித்தா' படத்திற்கு நக்மா தான் வேண்டும் என்று இயக்குனர் சுந்தர்.சி. அடம்பிடித்தாராம். ஆனால் தயாரிப்பாளரோ ரம்பாவைக் கொண்டு வந்து இறக்கினார்களாம். ஆனாலும தனது ஆசை நிராசையாகி விடக்கூடாது என்று நினைத்த சுந்தர்.சி. நக்மாவை 'மேட்டுக்குடி', 'ஜானகி ராமன்' ஆகிய படங்களில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தார்.

நாகர்ஜூனாவுடன் தெலுங்கில் நடித்தார். படங்கள் பிளாப் ஆனது. பாக்கியராஜின் வேட்டியை மடிச்சுக்கட்டு படத்தில் நடித்தார். கொஞ்சம் இருந்த மார்க்கெட்டும் காலியானது.

அதன்பிறகு அஜீத் நடித்த தீனா பாடலுக்கு ஒரு குத்தாட்டம் போட்டார். அது தான் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல். அதற்கு சம்மதிக்கக் காரணமே சிட்டிசன் பட வாய்ப்பு வந்தது தான். இந்தப் படம் தான் தனக்கு கம்பேக் என்று நினைத்த நக்மாவின் கனவு தகர்ந்தது.

படத்தில் நக்மாவுக்கு வழக்கமாக டப்பிங் கொடுத்த சரிதா கொடுக்கவில்லை. படத்தில் அவருக்கு சிபிஐ ஆபீசர் ரோல். ரொம்ப கம்பீரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து இயக்குனர் சரவண சுப்பையா வேறு குரலைத் தேடினார். ஆனால் அது இருந்த மார்க்கெட்டையும் வாஷ் அவுட்டாக்கி விட்டது.

அது யார் குரல் என்று கேட்கிறீர்களா? 80களில் கவர்ச்சி ராணிகளில் ஒருவராக வலம் வந்த அனுராதாவின் குரல் தான். ஒரு நல்ல நடிகையை இப்படிப் பண்ணிட்டாங்களே என்ற வருத்தம் அப்போதைய ரசிகர்களுக்கு இல்லாமல் இருக்காது.

Next Story