
சிம்புவுடன் போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

கொஞ்சம் குண்டாக இருந்த அவர் தற்போது உடலை இளைத்து மெலிந்த உடலுடன் காணப்படுகிறார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் இது வரலட்சுமிதானா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






