
தென்றலே என்னை தொடு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் அனவர் நடிகை ஜெயஸ்ரீ. முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதை தொடர்ந்து விடிஞ்சா கல்யாணம்,திருமதி ஒரு வெகுமதி,யாரோ எழுதிய கவிதை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயஸ்ரீ பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது ஐடி கம்பெனியில் உயரிய பதவியில் பணியாற்றி வருகிறார் இவர்.
இந்த நிலையில் இவர் அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களுக்காக அரசு மற்றும் தனியார் நடத்திவரும் காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறாராம்.
விடுமுறை நாட்களில் தனது மகனுடன் சென்று அங்கு நட்சத்திர உணவகத்துக்கு இணையாக சமையல் செய்து அனைவருக்கும் அன்பாக பரிமாறி வருகிறாராம். இது தனக்கு மன நிம்மதியை தருவதாகவும் கூறிவருகிறார் ஜெயஸ்ரீ.