பட்டப்பகலில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் – பதறவைக்கும் சிசிடிவி காட்சி !

சென்னையை அடுத்த கொளத்தூரில் மளிகைக் கடை அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டியின் நகையைப் பறித்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள மளிகைக்கடை ஒன்றுக்கு வந்துள்ளார் அந்த மூதாட்டி. பொருட்களை வாங்கிய அவர் கடை வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பக்கம் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் அவரிடம் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் முடியாததால் அவரைக் கீழே தள்ளி தரதரவென இழுத்து சென்றுள்ளார். அதன் பின் சங்கிலியை அறுத்த அவர் தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாக் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.

Published by
adminram