வித்தியாசமான கதை அம்சங்களுடன் பிரம்மாண்டமான படம் கொடுத்த நிறுவனம்

by adminram |

9d9d89d781f4df2ed18d878205e84f96-3

மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்றால் பிரம்மாண்டமான படம் தான் என்று தெரிந்து விடும். அந்தக் காலத்திலேயே பிரம்மாண்டமான படம் எடுக்கும் நிறுவனம் என்றால் அது இதுதான். தமிழ்நாட்டின் சேலத்தில் ஏற்படுப்படுத்தப்பட்ட திரைப்படக் கூடம். தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக்கூடம் இது தான்.

6da54f643ead69c1aaaef20979ba6fc8

முதன் முதலாக தென்னிந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்தது இந்த நிறுவனம் தான். அதுதான் அலிபாபாவும் 40 திருடர்களும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்களையும் வரிசைகட்டி தயாரித்துள்ளது மாடர்ன் தியேட்டர்ஸ்.

டி.ஆர்.சுந்தரம் தான் இதன் நிறுவனர். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் என்றாலே பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதும். பிரம்மாண்டம் மட்டுமின்றி கதை அம்சம், பாடல்கள், வசனம், இசை என அனைத்திலும் பிரம்மாதம் இருக்கும். தட்சயக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்த கௌரி, தயாளன், மனோன்மணி, சௌசௌ, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரி குமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலை கொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே? வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா? நான்கு கில்லாடிகள், சிஐடி சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் ஆகிய படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் தான்.

அவற்றுள் ஒரு சில படங்களை இங்கு காணலாம்.

கைதி கண்ணாயிரம்

d4a105512c9ee814e92ad9f87a020f51-2

1960ல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசையில் மனோகர், தங்கவேலு, வீரப்பா, டி.என் நடராஜன், ஜாவர் சீதாராமன், உள்பட பலர் நடித்துள்ளனர். கொஞ்சி கொஞ்சி பேசி, சுண்டெலிக்கும், மானம் நெஞ்சிலே, என் கண்ணைக் கொஞ்சம், காதலை சோடிச்சு, சால மிஸ்த்ரி, சங்கடம், சால மிஸ்த்ரி உள்பட இன்னிசைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கருந்தேள் கண்ணாயிரம்

87420dba21fefa67aab66e37c066cb9e-2

1972ல் வெளியான படம். ராமசுந்தரம் இயக்கினார். ஷியாம் பிலிப்ஸ் இசை அமைத்தார். ஜெய்சங்கர், லக்சுமி, மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். பூத்த மல்லியிலே, பணம் வேணும்...நேற்று வரை நீ யாரோ..? ஆகிய பாடல்கள் பட்டையைக் கிளப்பும் ரகங்கள்.

வல்லவன் ஒருவன்

67950e661e56df764d263fae54030201

1966ல் வெளியான இப்படத்தின் இயக்குனர் ஆர்.சுந்தரம். ஜெய்சங்கர், எல்.விஜயலக்ட்சுமி , மனோகர், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். பளிங்கினால் ஒரு மாளிகை என்னம் புத்தகம், அம்மம்மா கன்னத்தில், தொட்டு தொட்டு பாடவா, இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால், முத்து பொண்ணு வாம்

வல்லவனுக்கு வல்லவன்

1965ல் வெளியான படம். ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மணமாலா, அசோகன், மனோகர், மணிமாலா உள்பட பலர் நடித்துள்ளனர். வேதாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். ஊரறியும் பார்வையிலே. மனம் என்னும், பாரடி கண்ணே, அச்சமெங்கே, கன்டாலும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கொஞ்சும் குமரி

e564ff28ce18bcc80fea681ae4ee0d39

1963ல் வெளியான படம். ஜி.விஸ்வநாதன் இயக்கத்தில் மனோகர், மனோரமா, எஸ்.வி.ராமதாஸ், ஏ.கருணாநிதி, கே.கே.சௌந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் சென்னையில் பல தியேட்டர்களில் வெற்றி விழா கொண்டாடியது. இப்படத்தில் மனோரமா வித்தியாசமாக அதிரடி நாயகியாக நடித்துள்ளார். வேதாவின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட். ஜாலியான ஜோடிகளா, காத்திருந்தேனே நானே, மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோவமா?, தோப்புல ஒரு நாள், நடந்த காடு எனக்கு, ஆசை வந்த பின்னே, வணக்கம் வணக்கம் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படத்தில் மனோகரின் குரல் கம்பீரம் ரசிகர்களை அசத்தியது.

Next Story