More

கர்ப்பிணி பெண்ணை அண்டாவுக்குள் வைத்து தூக்கிச் சென்ற கொடூரம்! குழந்தையின் பரிதாப நிலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை அண்டாவில் உட்கார வைத்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Advertising
Advertising

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் எனும் மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள கிராமமான மினகபள்ளி எனும் ஊரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென வலி ஏற்பட 15 கி மீ தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர் உறவினர்கள். ஆனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் ஊருக்கு வெளியே ஓடும் ஆற்றைக் கடக்க வேண்டும். மழைப் பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்ததாலும் ஆற்றில் பாலம் இல்லாததாலும், பெரிய அண்டா ஒன்றில் அந்த பெண்ணை உட்கார வைத்து தண்ணீரில் தூக்கி சென்றுள்ளனர்.

இவ்வளவு இன்னல்களைக் கடந்து அவரைத் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவர்கள் இன்னும் பிரசவத்துக்கான நேரம் வரவில்லை என சொல்லிவிட்டு சென்றுள்ளனர். இதனால் லட்சுமி வலியோடு அங்கேயே உட்காரவைக்கப்பட்டுள்ளார்.  அடுத்த ஷிப்ட் மருத்துவர்கள் வந்து அவருக்கு பிரசவம் பார்த்தபோது குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், மருத்துவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்மந்தமாக அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Published by
adminram

Recent Posts