’தர்பார்’ வியாபாரத்தைக் கெடுத்த ’பேட்ட’ – இதுதான் காரணமா ?

ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் வியாபாரம் டல்லடிப்பதற்கு அவரது முந்தைய படமான பேட்ட யும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட அதன் வியாபாரம் படு டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினி படத்துக்கு இல்லாத அளவுக்கு தமிழக திரையரங்கு உரிமை விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம் என்ன என்று விசாரித்தால் அது ரஜினியின் முந்தைய படமான பேட்ட யில் வந்து நிற்கிறது. பேட்ட படம் போன பொங்கலுக்கு வெளியாகி தமிழக திரையரங்கு உரிமை மூலம் சுமார் 50 கோடி ரூபாய் மட்டுமே வசுலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் முந்தைய பட வியாபாரத்தின் விலையை விட சற்று கூடுதல் விலைக்கே வாங்க விநியோகஸ்தர்கள் ஆவலாக இருந்துள்ளனர்.

ஆனால் அந்த விலைக்கு விற்றால் மிகப்பெரிய நஷ்டம் வரும் என்பதால் நீண்ட இழுபறிக்கு பிறகு 60 கோடி ரூபாய்க்கு தமிழக திரையரங்க விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram