கூடவே இருந்தவரின் மரணம் … கதறி அழுத சீமான் !

சீமான் அரசியலில் இறங்கியதில் இருந்து அவர் கூடவே எந்நேரமும் இருந்து வந்தவர் அவரின் ஓட்டுனர் அன்புச்செழியன். இந்நிலையில் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக இன்று அவர் உயிரிழந்தார். இந்நிலையில் நாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற அவர் அன்புவின் உடலைப் பார்த்ததும் ‘தம்பீ… ‘ எனக் கதறி அழ ஆரம்பித்தார். இது அங்கிருந்த நாம்தமிழர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த உணர்ச்சிகரமான நிகழ்வை சுற்றி நின்று பார்த்தவர்கள் மேடையில் சிங்கம் போல முழுங்கும் சீமானா இப்படி குழந்தைப் போல அழுகிறார் என் ஆச்சர்யப்பட்டு போனார்கள்.

Published by
adminram